நல்லாட்சி அரசாங்கத்தின் அபிவிருத்தித் திட்டங்கள் மக்களிடம்!!

நல்லாட்சி அரசாங்கத்தால் நிறைவு செய்யப்பட்ட பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் மக்களிடம் கையளிக்கப்படவுள்ளன.

இன்று முதல் எதிர்வரும் 21ஆம் திகதி வரை பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் பல அபிவிருத்தி திட்டங்கள் மக்கள் பாவனைக்காக வழங்கப்படவுள்ளன.

தொடர்ந்தும் மொனராகலையில் நிர்மாணிக்கப்பட்ட 52 வீடுகள் எதிர்வரும் 17ஆம் திகதி மக்களுக்காக கையளிக்கப்படவுள்ளன.

குருநாகல் நீர் மற்றும் சுகாதார செயற்றிட்டங்கள் எதிர்வரும் 13ஆம் திகதி பிரதமர் தலைமையில் திறந்து வைக்கப்படவுள்ளன.

காணியில்லாத இரண்டாயிரம் குடும்பங்களுக்கு காணி உறுதிகளை வழங்கும் நிகழ்வு எதிர்வரும் 16ஆம் திகதி இரத்தினபுரி நகரசபை மைதானத்தில் நடைபெறவுள்ளது.

மேலும் 4130 பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கும் நிகழ்வு பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் எதிர்வரும் 20ஆம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி