யாழில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை!!

அண்மைக்காலமாக யாழ். குடாநாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகம் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் பல பகுதிகளில் ஏற்படும் அமானுஷ்ய சம்பவங்களால் மக்கள் பெரிதும் அச்சமடைந்துள்ளனர். இந்த நிலையில் உள்ள மக்களை உடனடியாக காப்பாற்ற வேண்டும்.

இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்கு தேவையான நடவடிக்கை மேற்கொள்ளுமாறு யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகம், யாழ்ப்பாண அரசாங்க முகவர் அலுவலகத்தில் இடம்பெற்ற சிவில் பாதுகாப்பு கூட்டத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் வாள், கத்திகளை எடுத்து வந்து மக்களை அச்சப்படுத்தும் பல்வேறு குழுக்களின் செயற்பாடு காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மக்களால் சுதந்திரமான வாழ்க்கையில் ஈடுபட முடியாத தேவையற்ற அச்சத்தில் வாழ நேரிட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனால் சிவில் பாதுகாப்பு குழு, யாழ்ப்பாணத்தின் ஏனைய பாதுகாப்பு பிரிவிற்கு முழுமையான ஆதரவு வழங்க வேண்டும் என அவர் கேட்டுள்ளார்.

மிகவும் துரதிஷ்டவசமாக ஏற்பட்டுள்ள இந்த நிலைமையை விரைவில் கட்டுப்படுத்துவதற்கு அவசியமான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு யாழ்ப்பாணத்தின் உயர் பாதுகாப்பு பிரதானியிடம் கேட்டுக்கொண்டதாகவும், இது தொடர்பில் தான் கலந்துரையாடல் மேற்கொண்டதாகவும் அரசாங்க அதிபர் மேலும் தெரிவித்துள்ளார்.


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி