உள்ளாடைக்குள் மறைத்து திருடிய பெண் ! ( வீடியா )

இலங்கையில் பல்வேறு விதமான திருட்டுச் சம்பவங்கள் நாள்தோறும் அரங்கேறியே வருகின்றன.இந்நிலையில் ஒரு குடும்பமே இணைந்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டுள்ள சி.சி.டி.வி காணொளி எமக்கு கிடைத்துள்ளது.

கடந்த 18 ஆம் திகதி பிற்பகல் இரண்டு மணியளவில் சிறப்பு அங்காடி நிலையம் ஒன்றுக்கு 4 பேர் முச்சக்கரவண்டியில் வந்தனர்.ஆண், பெண், குழந்தை மற்றும் சிறுமியொருவருமாக அங்காடிக்குள் நுழைந்தனர்.

பின்னர் அங்கிருந்த சில பொருட்களை குறித்த பெண், தனது ஆடையில் மறைத்து வைக்கும் விதம் சி.சி.டி.வி காணொளியில் பதிவாகியுள்ளது.

பின்னர் சூட்சமமாக திருட்டில் ஈடுபட்ட அவர்கள் சில பொருட்களுக்கு மாத்திரம் பணத்தை கொடுத்து விட்டு அங்கிருந்து சென்றனர்.

பின்னர் பொருட்கள் குறைவடைந்துள்ளமை தொடர்பில் சி.சி.டி.வி கெமராக்களை பரிசோதனை செய்த போதே இந்த திருட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளமை தெரியவந்துள்ளது.

அவர்கள் விலை உயர்ந்த 5 பால்மா டின்களையும், சொக்லைட்டுக்களையும் திருடி சென்றுள்ளதாக அங்காடியின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

இவற்றின் பெறுமதி ரூபாய் 8 ஆயிரம் ரூபாய் ஆகும்.

இந்த சம்பவம் எஹலியாகொட – பரகடுவ பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் காவல்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில், எஹலியாகொட காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


Share on Google Plus

About Admin

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி