சட்ட விரோதமாக தங்கத்தை கடத்திய வெளிநாட்டவர் கைது!!

சட்டவிரோதமாக 15 கோடி ரூபாய் பெறுமதியான தங்கத்தை கடத்தி வந்த இந்திய பிரஜை கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

குற்றப் புலனாய்வு திணைக்களம் மற்றும் பொலிஸ் போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் இணைந்து மேற்கொண்ட தேடுதலில் இந்த நபர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

டுபாய் நாட்டில் இருந்து வந்த குறித்த இந்திய பிரஜையிடம் இருந்து 20 கிலோ கிராம் தங்கம் கைப்பற்றப்பட்டதாக போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, அரசாங்கம் தங்கத்தின் இறக்குமதிக்கான வரியை அதிகரித்ததன் காரணமாக தற்போது வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு தங்கம் கடத்தி வரப்படுவது அதிகரித்திருப்பதாகவும் சுங்க அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி