சீனாவுக்கு விற்பனை செய்யவுள்ள ஹம்பாந்தோட்டை துறைமுகம்!!

தேசிய அரசாங்கத்தில் அங்கம் வகித்தாலும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் அரசாங்கம் ஒன்றை ஆட்சிக்கு கொண்டு வர வேண்டும் என்ற நோக்கத்தில் மாற்றமில்லை என அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா தெரிவித்துள்ளார்.

பொலன்நறுவையில் நேற்று நடைபெற்ற பொதுக் கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

எது எப்படி இருந்த போதிலும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தனியான அரசாங்கத்தை அமைப்பதற்கு பொருத்தமான நேரம் இதுவல்ல எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு கப்பல்கள் வருவதற்கான சாத்தியங்கள் இல்லை என்பதை அறிந்து கொண்டே முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அந்த துறைமுகத்தை நிர்மாணித்து சீனாவுக்கு விற்பனை செய்ய எண்ணியிருந்தாகவும் அமைச்சர் விஜயமுனி சொய்சா கூறியுள்ளார்.



Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி