தவறான முடிவெடுத்து உயிரை விட்ட நபர்!!

யாழ்ப்பாணத்தில் நபர் ஒருவரின் விபரீத முடிவால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

மிருசுவில் தவசிக்குளத்தை சேர்ந்த 55 வயதான செல்லத்துரை ஞானச்சந்திரன் என்பவரே உயிரிழந்துள்ளார்.

வயிறு வீங்கி வயிற்றுவலி அதிகமானதால் மன உளைச்சலுக்கு உள்ளானவர் தனது வயிற்றை பிளேட்டால் வெட்டிக் காயப்படுத்தியுள்ளார். அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். எனினும் சிகிச்சை பயனின்றி பத்து நாட்களின் பின்னர் உயிரிழந்தார்.

குறித்த நபரின் முகம் மற்றும் கை கால் வயிறு போன்றவை வீங்கின. சிகிச்சை பெற்ற போதிலும் வீக்கம் குணமாகவில்லை. வீக்கத்துடன் வலியும் அதிகமாகியது.

இதனால் மன உளைச்சலுக்கு உள்ளான குடும்பத் தலைவர் தவறான முடிவெடுத்து கடந்த 23ஆம் திகதி பிளேட்டால் வயிற்றின் 3 இடங்களில் வெட்டியுள்ளார்.

உடனடியாக சாவகச்சேரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மறுநாள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பயனின்றி உயிரிழந்தார்.


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி