மனித உரிமைகள் அமைப்பின் பெயரினை பயன்படுத்தி மோசடி செய்தவர் கைது!!

வவுனியாவில் மனித உரிமைகள் பவுண்டேசன் எனும் அமைப்பின் பெயரில் பொதுமக்களிடம் அங்கத்துவப்பணம் பெற்று வந்த குறித்த நிறுவனத்தின் உத்தியோகத்தரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இதில், உக்கிளாங்குளம் பகுதியைச் சேர்ந்த குறித்த நிறுவனத்தில் வடபிராந்திய இணைப்பாளராக பணியாற்றிய உத்தியோகத்தரே நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் வவுனியாவில் அண்மைக்காலமாக மனித உரிமைகள் பவுண்டேசன் என்ற பெயரில் ஒரு அமைப்பினை உருவாக்கி அதற்கு விண்ணப்பப்படிவங்களை தயாரித்து குறித்த நபர் பொதுமக்களிடம் அங்கத்துவப்பணம் பெற்று வந்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் வன்னிப்பிராந்திய பொறுப்பதிகாரி மனித உரிமைகள் பவுண்டேசனுக்கும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் செயற்பாடுகளுக்கும் தொடர்பு இல்லை இதனால் பொதுமக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களுக்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு பொறுப்பேற்காது என்று தெளிவுபடுத்தினார்.

தொடர்ந்தும் வவுனியாவில் செயற்பட்டு வரும் தொண்டு நிறுவனம், குறித்த மனித உரிமைகள் பவுண்டேசனுக்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை மேற்கொண்டிருந்தது.

குறித்த முறைப்பாட்டின் அடிப்படையிலே வடபிராந்திய இணைப்பாளராக பணியாற்றிய உத்தியோகத்தரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மேலதிக விசாரணைகளின் பின்னர் கைது செய்யப்பட்ட நபரை இன்று நீதவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி