பள்ளித்தோழியை அடித்தே கொலை செய்த இளம்பெண்ணிற்கு அளிக்கப்பட்ட தீர்ப்பு!!

கனடாவின் Manitoba பகுதியில் தனது பள்ளித்தோழியை தனது இன்னொரு தோழியுடன் சேர்ந்து அடித்தே கொலை செய்த இளம்பெண்ணுக்கு அளிக்கப்பட்ட தீர்ப்பு ஏமாற்றமளித்ததால் இறந்த பெண்ணின் பெற்றோர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர்.

பேஸ்புக் லைவ் வீடியோவில் இரண்டு இளம்பெண்கள் சேர்ந்து இன்னொரு பெண்ணை அடித்துக் கொல்லும் காட்சிகள் இணையத்தில் வைரலாகப் பரவியது கண்டு மக்கள் அதிர்ச்சியுற்றனர். பின்னர் பேஸ்புக் அந்த வீடியோக்களை அகற்றியது.

இரண்டு இளம்பெண்களால் கொடூரமாக தாக்கப்பட்ட அந்த இளம்பெண்ணை அவர்கள் அறைக்குள் போட்டு மூடி விட்டு சென்றுவிட்டதால் இரத்தம் வெளியேறி, உடலில் நீர் வற்றிப்போய் அந்த பெண் பரிதாபமாக உயிரிழந்தாள்.இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த வழக்கில் ஏற்கனவே கொலைக்கு உதவிய ஒரு பெண்ணுக்கு 40 மாதங்கள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுவிட்ட நிலையில், இரண்டாவது குற்றவாளிக்கு இரண்டாண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டது.

தங்கள் மகளை அடித்துக் கொன்ற பெண்ணுக்கு வெறும் இரண்டாண்டுகள் சிறை வழங்கப்பட்டதால் ஏமாற்றமடைந்த அவளது உறவினர்கள், இது அநீதி என்று கோர்ட் வளாகத்திலேயே சத்தமிட்டனர்.அந்தப் பெண் 16 வயதுடையவளாக இருந்தபோது இந்த கொலையைச் செய்ததால் அவளை பெரியவளாக கருதாமல் ஒரு குழந்தையாக கருதி அதற்கேற்ற தண்டனையையே அளித்துள்ளதாக நீதிபதி தெரிவித்தார்.

அவள் தாக்கும்போது ஒரு பெரிய பெண்ணைப்போல நடந்துகொள்ளவில்லை என்று நீதிபதி கூறிவிட்டார்.

இந்த தீர்ப்பு முகத்தில் அறைந்தது போல உள்ளது என உயிரிழந்த பெண்ணின் ஏமாற்றமடைந்த பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி