நாட்டில் தற்போது சர்வாதிகார ஆட்சி!!

நாட்டில் தற்போது ஆட்சியில் இருப்பது சர்வாதிகார அரசாங்கம் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் அரசாங்கத்திற்கு எதிராக எதிர்வரும் செப்டெம்பர் 5ஆம் திகதி பாரிய ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

காலியில் அண்மையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். மேலும் கூறுகையில்,

பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள தொடருந்து ஊழியர்களுக்கு பொலிஸார் அழுத்தம் கொடுக்கின்றனர். பொலிஸாரின் தலையீட்டிலேயே தற்போது அனைத்தும் நடைபெறுகிறது.

விசேட நீதிமன்றங்களை ஏற்படுத்தி, அமைச்சர்களுக்கு தேவையான வகையில் வழக்குகள் விசாரிக்கப்படுகின்றன. நீதித்துறையில் சுயாதீனம் இல்லை. ஜனநாயகம் இல்லை. வாழ்க்கை செலவுகள் அதிகரித்துள்ளன.

தாங்கிக் கொள்ள முடியாத அளவில் வரி அறவிடப்படுகிறது. அபராதம் விதிக்கப்படுகிறது. பிணை வழங்காது சிறையில் அடைக்கின்றனர். நாடாளுமன்ற உறுப்பினர்கள் நிறைவேற்று அதிகாரத்தை அவமதிக்கின்றனர்.

150 ஆண்டுகளாக பொலிஸார் சிறப்பாக பணியாற்றினர். இராணுவத்திற்கு பொலிஸ் அதிகாரங்களை வழங்கியுள்ளனர். மக்களுக்கு சுதந்திரம் இல்லை. இது சர்வாதிகார அரசாங்கம் எனவும் மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் தற்போது ஆட்சியில் இருப்பது சர்வாதிகார அரசாங்கம் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் அரசாங்கத்திற்கு எதிராக எதிர்வரும் செப்டெம்பர் 5ஆம் திகதி பாரிய ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

காலியில் அண்மையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். மேலும் கூறுகையில்,

பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள தொடருந்து ஊழியர்களுக்கு பொலிஸார் அழுத்தம் கொடுக்கின்றனர். பொலிஸாரின் தலையீட்டிலேயே தற்போது அனைத்தும் நடைபெறுகிறது.

விசேட நீதிமன்றங்களை ஏற்படுத்தி, அமைச்சர்களுக்கு தேவையான வகையில் வழக்குகள் விசாரிக்கப்படுகின்றன. நீதித்துறையில் சுயாதீனம் இல்லை. ஜனநாயகம் இல்லை. வாழ்க்கை செலவுகள் அதிகரித்துள்ளன.

தாங்கிக் கொள்ள முடியாத அளவில் வரி அறவிடப்படுகிறது. அபராதம் விதிக்கப்படுகிறது. பிணை வழங்காது சிறையில் அடைக்கின்றனர். நாடாளுமன்ற உறுப்பினர்கள் நிறைவேற்று அதிகாரத்தை அவமதிக்கின்றனர்.

150 ஆண்டுகளாக பொலிஸார் சிறப்பாக பணியாற்றினர். இராணுவத்திற்கு பொலிஸ் அதிகாரங்களை வழங்கியுள்ளனர். மக்களுக்கு சுதந்திரம் இல்லை. இது சர்வாதிகார அரசாங்கம் எனவும் மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி