முல்லைத்தீவில் சப்பாத்தை அணிவதற்கு தயாரானவரிற்கு நடந்த திகில் சம்பவம் !

வங்கி உத்தியோகத்தர் ஒருவர் தனது சப்பாத்தை போடுவதற்காக எடுத்தபோது அதனுள் இருந்த விஷ ஜந்து ஒன்றைப் பார்த்து அதிர்ச்சியடைந்த சம்பவம் முல்லைத்தீவில் இடம்பெற்றுள்ளது.கடந்த செவ்வாய்க்கிழமை குறித்த நபர் வங்கிக்குச் செல்வதற்காக ஆயத்தமாகிய நிலையில் வீட்டின் வெளிப் படியில் இருந்த சப்பாத்தைப் போடுவதற்காக எடுத்துள்ளார்.

வழக்கம்போலவே சப்பாத்துக்குள் காலுறை (சொக்ஸ்) இருப்பதாக எண்ணி கைவிட்டு இழுத்து எடுத்துள்ளார்.

தான் எடுப்பது அசாதாரண நிலையில் இருந்ததை உணர்ந்த அவர் சப்பாத்தை நன்றாக அவதானித்தபோது அதனுள் சிறிய பாம்பு ஒன்று சுருண்டிருப்பதை அவதானித்து அதிர்ச்சியடைந்தார்.

அதனையடுத்து அந்த சப்பாத்தை உதறி எறிந்தபோது பாம்பு வெளியே விழுந்தது. எவ்வாறாயினும் குறித்த பாம்பு ஓடாமல் சுருண்ட நிலையிலேயே இருந்துள்ளது.

புடையன் வகையைச் சேர்ந்த குறித்த பாம்பு அதிக விஷமுள்ள பாம்பாக இருந்தபோதும் தீண்டாமல் விட்டது தனது அதிஷ்டமே என்று உணர்ச்சி பொங்க அவர் கூறினார்.

பாம்புகள் சப்பாத்து போன்ற மறைவிடங்களை நன்கு விரும்பக்கூடியவையாகும். வீட்டிற்கு வெளியே சப்பாத்துக்களை கழற்றி வைக்கும்போது மிகவும் அவதானத்துடன் செயற்படவேண்டியது அவசியமாகும்.

பாம்புகள் மட்டுமன்றி ஏனைய விஷ ஜந்துக்களும் மறைந்து காணப்படலாம் என்பது குறிப்பிட்டுக் கூறவேண்டியதாகும்.


Share on Google Plus

About Admin

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி