தீவிரமாக தேடப்பட்டு வரும் 10 பேர்!!

யாழ். குடாநாட்டில் 10 பேர் தீவிரமாக தேடப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் 3 இடங்களில் 5 வீடுகளில் தாக்குதல் மேற்கொண்டமையினால் மூன்று பேர் காயமடைந்துள்ளனர்.

இந்த சம்பவங்கள் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சம்பவத்துடன் தொடர்புடைய நபர்கள் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தப்பிச் சென்ற சந்தேக நபர்களை தேடுவதற்காக பொலிஸார் தீவிர தேடுதல் நடவடிக்கை ஒன்றை ஆரம்பித்துள்ளனர்.

ஆவா குழுவின் உறுப்பினர்கள் இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தாக்குதலுக்காக 5 மோட்டார் சைக்கிளில் 10 பேர் வருகை தந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி