11 இளைஞர்கள் கடத்த்தல் விவகாரத்தில் சம்மந்தப்பட்டுள்ள உயரதிகாரி!!

2008ஆம் ஆண்டு கொழும்பில் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்ட 11 இளைஞர்கள் விவகாரத்தில் மற்றுமொரு முக்கிய படை உயரதிகாரியும் தொடர்புடையதாக அரசாங்க ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

குறித்த இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்டமை தொடர்பில் ஏற்கனவே நேவி சம்பத் என்ற முன்னாள் கடற்படை வீரர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதனையடுத்து, முப்படைகளின் தலைமையதிகாரி அட்மிரல் விஜர விஜயகுணவர்த்தனவை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஏனெனில், நேவி சம்பத்தின் வாக்குமூலத்தின்படி இந்தக் குற்றச்சாட்டில் இருந்து நேவி சம்பத் தப்பிச் செல்வதற்காக முப்படைகளின் தலைமையதிகாரி அட்மிரல் விஜயகுணவர்த்தன பண உதவிகளை செய்தார் என்ற விடயம் வெளியாகியுள்ளது.

இதற்கமைய, அவரைக் கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையிலேயே படைத்தரப்பின் மற்றும் ஒரு முக்கியமானவர் இந்த குற்றச்செயல்களில் சம்பந்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி