152ஆவது பொலிஸ் தினத்தை முன்னிட்டு சுத்தப்படுத்தும் வேலைத் திட்டம்!!

152ஆவது பொலிஸ் தினத்தை முன்னிட்டு சமாதான நகரம் என அழைக்கப்படும் ஹட்டன் நகரை சுத்தப்படுத்தும் வேலைத் திட்டம் ஒன்றினை ஹட்டன் பொலிஸ் நிலையம் மற்றும் ஹட்டன் டிக்கோயா நகரசபை ஆகியன இணைந்து முன்னெடுத்துள்ளன.

குறித்த வேலை திட்டமானது இன்றைய தினம் காலை 7.30 மணியளவில் ஆரம்பமாகியுள்ளது.

இந்த சிரமதான பணிக்கு ஹட்டன் பிரதேசத்தில் உள்ள பொலிஸ் சமாதான குழுக்கள், முச்சக்கர வண்டி சாரதிகள், வான் சாரதி சங்க உறுப்பினர்கள், விளையாட்டுக் கழகங்கள் அகியன இணைந்திருந்தன.குறித்த வேலைத் திட்டமானது ஹட்டன் மல்லியப்பூ சந்தி தொடக்கம் டிக்கோயா வரை இடம்பெற்றுள்ளது.

மேலும் மக்கள் நடமாடும் பகுதிகள், பொது இடங்களில் மற்றும் வீதியில் இரு மருங்கிலும் கொட்டிக்கிடக்கும் குப்பைகள் பிளாஸ்ரிக் பொருட்கள், கண்ணாடி பொருட்கள் உட்பட அனைத்து கழிவுகளும் இதன் போது அகற்றப்பட்டுள்ளன.

தொடர்ந்தும் சூழலை சுத்தமாக வைத்திருக்குமாறு கடை உரிமையாளர்கள் மற்றும் வீட்டுரிமையாளர்களுக்கு வலியுறுத்தப்பட்டன.


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி