23 வருடங்களிற்கு பின் விடுவிக்கப்பட்ட 2 ஏக்கர் காணி!!

யாழ்ப்பாணம் - அச்சுவேலி பகுதியில் 23 வருடங்களாக பாதுகாப்பு படையினர் வசமிருந்த 2 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டுள்ளது.

6 குடும்பங்களுக்கு சொந்தமான 2 ஏக்கர் காணியே நேற்றைய தினம் விடுவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 1995ஆம் ஆண்டு முதல் குறித்த காணி இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டிருந்தது.

இந்த நிலையில் தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி கடந்த 2014ஆம் ஆண்டு காணி உரிமையாளர்கள் அச்சுவேலி இராணுவ முகாமிற்கு முன்பாக பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றினை மேற்கொண்டிருந்தனர்.

நான்கு வருட போராட்டங்களின் பின் காணிகள் மக்களுக்கு கிடைத்துள்ளன.

மேலும், ஏற்கனவே ஒன்றரை ஏக்கர் காணி விடுவிக்கப்பட்ட நிலையில், எஞ்சியிருந்த 2 ஏக்கர் காணி நேற்று விடுவிக்கப்பட்டுள்ளது.




Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி