3 வருட காலத்தில் வடக்கு மாகாணத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள 22,000 இலட்சம் ரூபாய் நிதி!!

3 வருட காலத்தில் வடக்கு மாகாணத்திற்கு 22,000 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக நீதி அமைச்சர் தலதா அத்துகோரல தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் மேல் நீதிமன்றம் உள்ளடக்கிய நீதிமன்றங்களுக்கான புதிய கட்டடத்தொகுதிகளை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இதை குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில்,

2015ஆம் ஆண்டு மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதற்குப் பின் பிரதமர் மற்றும் ஜனாதிபதியின் ஒத்துழைப்புடன், முல்லைத்தீவு, மாங்குளம் மற்றும் யாழ்ப்பாண நீதிமன்ற கட்டுமானப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.அந்த வகையில் குறித்த கட்டடங்களின் நிர்மாணப்பணிகள் 50 வீதம் நிறைவடைந்துள்ளன. மேலும், 2020ஆம் ஆண்டு இந்த கட்டடத்தின் பணிகள் முழுதும் நிறைவடைந்துவிடும்.

வடக்கு, கிழக்கு மற்றும் தெற்கு என பாரபட்சம் பார்க்காமல் அனைத்து பகுதிகளிலும் அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதற்கு பிரதம நீதியரசர், ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு நன்றி கூறுவதாகவும் நீதி அமைச்சர் தலதா அத்துகோரல குறிப்பிட்டுள்ளார்.கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற நீதிவான் மாணிக்கவாசகர் கணேசராஜாவின் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம நீதியரசர் பிரியசாத் டெப், நீதி அமைச்சர் தலதா அத்துகோரல ஆகியோர் பிரதம அதிதிகளாக கலந்து கொண்டு அடிக்கல்லை நாட்டி வைத்தனர்.

இந்த நிகழ்வில் யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிறேம்சங்கர், இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் யு.அர்.டி சில்வா மற்றும் நீதிபதிகள், மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமை நாயகம் சட்டத்தரணிகள் நீதிமன்ற உத்தியோகத்தர்கள் பொலிஸ் உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி