ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தற்கொலைக்கு பில்லி சூனியம் காரணமா? வெளியான பகீர் தகவல்

இந்தியாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்தில் உள்ள ஸ்கை அப்பார்ட்மெண்ட் வீட்டில் குணால் திரிவேதி உட்பட மூன்று பேர் தற்கொலை செய்து கொண்டனர்.

இதில் குணால் திரிவேதி தூக்கில் தொங்கிய நிலையிலும், அவரது மனைவி கவிதா திரிவேதி தரையிலும், மகள் Shrin படிக்கையிலும் இறந்து கிடந்தனர்.

இதைக் கண்டு அதிர்ச்சியைடைந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக பொலிசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பின் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிசார் அவர்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.இதையடுத்து பொலிசார் மேற்கொண்ட முதல் கட்ட விசாரணையில் குணால் திரிவேதி தன் மனைவி மற்றும் மகளுக்கு விஷம் கொடுத்து விட்டு, பின்னர் தூக்கு மாற்றி தற்கொலை செய்துக்கொண்டது தெரியவந்தது.

இந்த தற்கொலைக்கு பில்லி-சூனியம் காரணமாக இருக்கலாம் எனவும் கூறப்பட்டது.

இந்நிலையில், அந்த வீட்டில் சோதனை செய்த போது குணால் திரிவேதி தனக்கு யாரோ பில்லி சூனியம் வைத்துவிட்டதாகவும், இதன் காரணமாகவே நான் தொடர்ந்து குடிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இது அவர் எழுதியது தானா என்பதை உறுதி செய்ய பொலிசார் தடயவியல் ஆய்வகத்திற்கு அனுப்பியுள்ளனர்.

மேலும் குணால் திரிவேதி குடிப்பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளார். இது குறித்து அவர் குடும்பத்தினரிடம் தனக்கு யாரோ பில்லி சூனியம் வைத்துவிட்டனர், அதன் காரணமாகவே நான் குடிக்கிறேன் என்று கூறியுள்ளார்.

ஆனால் குடும்பத்தினர் இவர் மது போதையில் பேசுகிறார் என்று அஜாக்கிரதையாக இருந்துள்ளனர். அதுமட்டுமின்றி இவர்கள் குடும்பத்தினருக்கு பொருளாதார பிரச்சனை கிடையாது, மத்தியப் பிரதேசத்தில் 14 லட்சம் ரூபாய் கடனும் கொடுத்துள்ளனர்.

இதனால் இவர்கள் என்ன காரணத்திற்காக இறந்தனர் என்பது குறித்து பொலிசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சமீபத்தில் டெல்லியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் நாட்டையே உலுக்கியது குறிப்பிடத்தக்கது.Share on Google Plus

About Admin

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி