கொழும்பில் அடையாளம் காணப்படாத சுமார் 300 சடலங்கள் !

கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் இந்த ஆண்டு வரையிலான காலப்பகுதியினில், அடையாளம் காணப்படாத சுமார் 300 சடலங்கள் கொழும்பில் உள்ள மயானங்களில் அடக்கம் செய்யப்பட்டுள்ளன.இதேபோல நாட்டின் ஏனைய பகுதிகளிலும் பல சடலங்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்த ஆண்டு இதுவரை அடையாளம் தெரியாத 67 சடலங்கள் கொழும்பு சட்ட மருத்துவ சவச்சாலைக்கு கொண்டு வரப்பட்டன.

அவற்றில் 32 சடலங்களுக்கு உரிமை கோரப்பட்டது.

ஏனைய 35 சடலங்கள் கொழும்பு மாநகர சபையினால் தெரிவு செய்யப்பட்ட ஒப்பந்தக்காரரினால் அடக்கம் செய்யப்பட்டன.

இதேபோல, கடந்த ஆண்டில் 117 சடலங்கள் கொண்டுவரப்பட்டு அவற்றில் 65 சடலங்கள் அடையாளம் காணப்படாத நிலையில் அடக்கம் செய்யப்பட்டன.

கடந்த 5 வருட காலப்பகுதியில் அடையாளம் காணப்படாத சடலங்கள் குறித்த புள்ளி விபரங்கள் சட்ட மருத்துவ செயலகத்தினால் வெளியிடப்பட்டுள்ளன.

இதற்கு அமைய கடந்த 2013ஆம் ஆண்டு முதல் 2018ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியினில் 298 சடலங்கள் சட்ட மருத்துவ சவச்சாலைக்கு கொண்டு வரப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.


Share on Google Plus

About Admin

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி