கிழக்கு மாகாணத்தில் 30 பேர் கைது!!

திருகோணமலை மற்றும் கந்தளாய் தலைமையக பொலிஸ் நிலையங்களில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்றிரவு முதல் இன்று அதிகாலை வரை இடம்பெற்ற சுற்றிவளைப்பின் போதே இவ்வாறு 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதனடிப்படையில், திருகோணமலை தலைமையக பொலிஸ் நிலையம் முன்னெடுத்த சுற்றிவளைப்பில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 10 சந்தேகநபர்களையும், போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் ஒருவரையும், மதுபோதையில் வாகனம் செலுத்திய நால்வரையும், சந்தேகநபர்கள் ஐவரையும், குழப்பம் ஏற்படுத்திய ஒருவரையும் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் கந்தளாய் பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் இரண்டு குற்றச்செயல்களுடன் தொடர்புபட்ட ஒருவரையும், பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நால்வரையும், சந்தேகத்தின் பேரில் மூவரையும், ஹெரோயின் 2 வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் சந்தேகநபர் ஒருவரையும் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை இன்றைய தினம் திருகோணமலை மற்றும் கந்தளாய் நீதிமன்றங்களில் ஆஜர்படுத்த உள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி