கனடாவில் 400 பேர் வேலையை இழக்கின்றனர் !

ரொறொன்ரோவில் மிகவும் பிரபலமான சப்பாத்து நிறுவனம், டவுண் சூஸ் (Town Shoes) நிறுவனம் தனது அனைத்து கடைகளையும் மூட தீர்மானித்துள்ளது.இதனால் தமது 38 கடைகளில் பணிபுரியும் 400 பணியாளர்கள் வேலையை இழக்கும் அபாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.

நிறுவனத்தின் வரலாற்று செயல் திறன் போட்டி நிலை மற்றும் எதிர்கால தேவைகள் குறித்து நிறுவனம் மேற்கொண்ட 90 நாட்கள் மதிப்பாய்வை தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.

இதற்கமைய, டவுண் சூஸ் (Town Shoes) நிறுவனத்தின் ஜனவரி நிதியாண்டில் அனைத்து கடைகளும் மூடப்படவுள்ளது.

ஒகையோவை சோர்ந்த சப்பாத்து வியாபார குறியீடான DSW Inc. கடந்த 1952ஆம் ஆண்டு, லியோனாட் சிம்சன் என்பவரால் ரொறொன்ரோவில் முதல் முதல் உருவாக்கப்பட்டது.


Share on Google Plus

About Admin

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி