இந்தோனேசியாவில் சுனாமி தாக்கியதில் 400க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!!

இந்தோனேசியாவின் சுலவேசி தீவில் நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி தாக்கியதில் 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இந்தோனேசியாவின் சுலவேசி தீவின் டோங்காலா நகரில் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டது.

முதலில் 6.1 ரிக்டர் அளவில் பதிவான நிலநடுக்கம், அடுத்ததாக மத்திய பகுதியில் 7.5 ஆக பதிவானது.

அடுத்தடுத்த நிலநடுக்கங்களால் கட்டிடங்கள் இடிந்து விழுந்தன, பலர் இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டனர்.

இதனை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு, திரும்ப பெறப்பட்டது.

எனினும் சிறிது நேரத்தில் கடலோரப்பகுதிகளில் சுனாமி தாக்கியது, இதில் கடலோர பகுதிகளில் உள்ள வீடுகள், கட்டிடங்கள் சேதமடைந்தன, பலரை சுனாமி அடித்துச் சென்றது.

இந்நிலையில் சுனாமியின் கோரத் தாண்டவத்தால் 400 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது, பலரும் காணாமல் போயுள்ள நிலையில் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

இதற்கிடையே சுனாமி தாக்கிய போது எழுந்த ராட்சத அலைகள் தொடர்பான வீடியோ வெளியாகி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி