5000 ரூபாய் போலி நாணயத்தாள்களுடன் கொழும்பில் சிக்கிய நபர் !

கொழும்பு புறக்கோட்டை பெஸ்டியன் மாவத்தை பகுதியில் 5000 ரூபாய் போலி நாணயத்தாள்களுடன் ஒருவரை பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர்.

இன்று காலை கைதுசெய்யப்பட்ட நபரிடம் இருந்து 13, ஐயாயிரம் ரூபாய் போலி நாணயத்தாள்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

சந்தேக நபர், பெஸ்டியன் மாவத்தையில் பேருந்து நடத்துனர் ஒருவரிடம் போலி நாணயத்தாளை மாற்றுவதற்கு வழங்கியுள்ளார்.

நாணயத்தாள் தொடர்பில் ஏற்பட்ட சந்தேகத்தை அடுத்து பேருந்து நடத்துனர், அது குறித்து பொலிஸாருக்கு அறிவித்தார். அங்கு சென்ற பொலிஸார் சந்தேக நபரை கைது செய்தனர்.

சந்தேக நபர் அம்பாறை பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் மேலதிக விசாரணைகளுக்காக அவரை குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் கையளித்துள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.


Share on Google Plus

About Admin

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி