அவுஸ்திரேலியாவில் பூட்டிய வீட்டினுள் 5 பேர் சடலமாக மீட்பு!!

அவுஸ்திரேலியாவில் பூட்டிய வீட்டினுள் 5 பேர் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அவுஸ்திரேலியாவின் பெர்த் உள்நாட்டிலுள்ள பெட்ஃபோர்டின் புறநகர் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் ஆள் நடமாட்டம் இல்லாததை அறிந்த அண்டை வீட்டார் ஒருவர் பொலிஸாருக்கு தகவல் கொடுத்தார்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் வீட்டினை திறந்து பார்த்த பொழுது, உள்ளே 3 குழந்தைகள் மற்றும் இரண்டு பெண்கள் சடலமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.பின்னர் 5 பேரின் உடல்களை கைப்பற்றிய பொலிஸார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இச்சம்பவம் குறித்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், இறந்தவர்கள் 18 மாத இரட்டைக் குழந்தைகள் அவர்களது மூன்று வயது சகோதரி, தாயார் மற்றும் பாட்டி என்பது தெரியவந்தது.

மேலும் குழந்தைகளின் தந்தை ஒரு சுரங்க தொழிலாளி என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுசம்மந்தமாக 20 வயது இளைஞரிடம் பொலிஸார் விசாரணை மேற்கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி