அமெரிக்காவில் குடியிருப்பு வளாகத்தில் துப்பாக்கிச் சூடு!! 6 பேர் படுகாயம்!!

அமெரிக்காவில் குடியிருப்பு வளாகத்தில் பகடை ஆட்டம் ஆடிக்கொண்டிருந்தவர்கள் இடையே ஏற்பட்ட தகராறில் துப்பாக்கிச் சூடு நடந்ததால், 6 பேர் படுகாயம் அடைந்ததுடன் இருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு வளாகம் ஒன்றில், கடந்த ஞாயிற்றுக்கிழமை கும்பல் ஒன்று நுழைந்துள்ளது.

அந்த கும்பல் பகடை விளையாட்டில் ஈடுபட்டுள்ளது. அப்போது ஏற்பட்ட தகராறில் அவர்களுக்குள் துப்பாக்கிச் சூடு நடந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த பொலிசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.

பின்னர், அங்கு குண்டடி பட்டவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுதொடர்பாக பொலிசார் மேற்கொண்ட விசாரணையில், துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டவர்களில் 17 இளைஞருடன் மற்றும் ஏழு பேர் 20 வயதிற்கும் மேற்பட்டவர்கள் என்பது தெரிய வந்தது.

இதுகுறித்து காவல் நிலைய செய்தி தொடர்பாளர் கூறுகையில், ‘துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் பின்னணியை அறிய பொலிசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். பகடை ஆட்டத்திற்கும், துப்பாக்கிச் சூட்டிற்கும் இடையில் நடந்தது என்ன என்பது இப்போது எதுவும் தெரியவில்லை.

தீவிர விசாரணைக்கு பின்னர் தான் தெரிய வரும். ஆனால் இச்சம்பவத்தின் ஆதாரங்களாக கைத்துப்பாக்கிகள் மற்றும் துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டன.

இப்பகுதியில் ரவுடிக் கூட்டத்தின் நடவடிக்கைகள் அதிகரித்து வருகின்றன. இப்போது தொடங்கப்பட்டுள்ள விசாரணையில் அவர்களின் அனைத்து நடவடிக்கைகளும் வெளிச்சத்துக்கு வரும்’ என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும், இரண்டு பேர் உயிருக்கு போராடிக்கொண்டிருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி