ஜனாதிபதியின் 67வது பிறந்த நாளை முன்னிட்டு மதவழிபாட்டு நிகழ்வுகள்!!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் 67ம் பிறந்த நாளை முன்னிட்டு மதவழிபாட்டு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

பொலன்னறுவை மாவட்டத்திலும் நாட்டின் ஏனைய பகுதிகளிலும் இவ்வாறு மத வழிபாட்டு நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன.

1989ம் ஆண்டு பொலனறுவை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவான மைத்திரிபால சிறிசேன, கடந்த 2015ம் ஆண்டு ஜனவரி மாதம் 8ம் திகதி இலங்கையின் ஆறாம் நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக பதவி ஏற்றுக் கொண்டார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராகவும் கடமையாற்றி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி