ரணில் தலைமையில் நடைபெறவுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் 72ஆவது மாநாடு!!

ஐக்கிய தேசியக் கட்சியின் 72ஆவது மாநாடு கட்சியின் தலைவரும், பிரதமருமான ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடைபெற உள்ளது

இந்த மாநாடு கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் எதிர்வரும் 6ஆம் திகதி காலை 9 மணியளவில் மத வழிபாடுகளுடன் ஆரம்பமாக உள்ளது.

கட்சியின் உட்கட்டமைப்பு முறைமையை மறுசீரமைப்பதற்கு ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட இணக்கப்பாட்டுக்கு, அங்கீகாரம் பெற்றுக்கொள்வதே இந்த மாநாட்டின் பிரதான நோக்கம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சி என்ற வகையில், அடுத்த ஜனாதிபதி தேர்தல் வரையிலும் பயணிப்பதற்கான அடிப்படை பற்றிய இணக்கப்பாட்டுடன் கட்சி மறுசீரமைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளது என்றும் கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தனது 67ஆவது ஆண்டு நிறைவை மத அனுஷ்டாங்களுடன் நேற்று கொண்டாடியது.

இதேவேளை நாடு முழுவதிலும் சமய நிகழ்வுகள் இடம்பெற்றதாக தெரிவித்துள்ள கட்சியின் பொதுச் செயலாளர் பேராசிரியர் ரோஹன லக்‌ஷமன் பியதாச, கட்சியின் வருடாந்த பொதுக்கூட்டம் இந்த மாத இறுதிக்குள் நடத்தப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.



Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி