ஐ.நாவின் 73வது பொதுச்சபை கூட்டத் தொடரில் ட்ரம்ப்பின் திடீர் அறிவித்தல்!

தமது வெளிப்படையான நட்பு நாடுகள் மற்றும் தம்மை மதிக்கும் நாடுகளுக்கு மாத்திரமே நிதி உதவிகள் வழங்கப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் அமைப்பின் 73வது பொதுச்சபை கூட்டத் தொடரின் பிரதான அமர்வில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் பேசிய அவர். “சோஷலிஸம், உலகமயமாதல் என்பன தோற்றுவிட்டன. இனி உலக நாடுகளுக்கு இலவச நன்கொடை தரமாட்டோம்.

எந்த நாட்டு பாதுகாப்பையும் பொறுப்பெடுக்கவும் மாட்டோம். அனைத்தையும், அமெரிக்க நலனை முன்நிறுத்தியே தீர்மானிப்போம்.ஐக்கிய அமெரிக்காவோடு எந்தெந்த நாடுகள் மதிப்பளித்து நடக்குமோ எந்த நாடுகள் தமது நாட்டுடன் நட்பு பாராட்டி செயற்படுமோ அந்த நாடுகளுக்கு மாத்திரமே ஐக்கிய அமெரிக்கா நிதியுதவிகளை வழங்கும்.” என கூறியுள்ளார்.

இதேவேளை, தற்போது அனைத்து நாடுகளிடத்திளும் பொருளாதார மற்றும் நிதிநெருக்கடிகளை ஏற்படுத்தி வருவதில் ஐக்கிய அமெரிக்கா தீவிரம் காட்டி வருகிறது.

தற்போது அடுத்தக் கட்டமாக குறித்த நடவடிக்கையை அமெரிக்கா மேற்கொண்டுள்ளது. இதனால், பல உலக நாடுகள் பாதிப்புக்குள்ளாக இருக்கின்றன.

இவ்வாறான நிலையில், அமெரிக்க ஜனாதிபதி தற்போது விடுத்துள்ள அறிவிப்பானது பல நாடுகளிடத்தில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி