சம்பளம் 750 ருபாய்.! மூன்று படங்கள் ரிலீஸே ஆகல..வருத்தத்தை பகிர்ந்த யாஷிகா ஆனந்த் !

பிக் பாஸ் வீட்டில் போட்டியாளராக பங்குபெற்றுள்ள நடிகை யாஷிகா ஆனத்ந், சமீபத்தில் கௌதம் கார்த்திக் நடிப்பில் வெளியான இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமடைந்தார். அதன் பின்னர் தான் இவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெறும் வாய்ப்பும் கிடைத்தது.பிக் பாஸ் நிகழ்ச்சியிலேயே இவர் தான் மிகவும் வயது குறைவான போட்டியாளர். தற்போது இவருக்கு 19 வயது தான் ஆகிறது. ஆனால், இந்த வயதிலேயே ஒரு முதிர்ச்சியடைந்த பெண் போல இவரது நடவடிக்கை இருக்கிறது. யாஷிகா ஆனந்த் தனது 15 வயதிலேயே படங்களில் நடிக்க துவங்கியுள்ளார்.

சமீபத்தில் இது குறித்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் அவர் கூறியபோது, நான் நிறைய படம் 10 ஆம் வகுப்பு படிக்கும் போதே நடிச்சிருக்கேன். ஃபர்ஸ்ட் நான் வெறும் 750 ரூபாய்க்கு கூட நடித்துள்ளேன். அது போன்ற படங்களில் நான் என்னோட முழு ஈடுபாடையும் கொடுத்து நடித்தேன்.

ஆனால், அந்த படமெல்லாம் வெளிவராமலேயே போனது. அது போல இரண்டு மூன்று படங்கள் வெளிவராமலேயே போனது.

அதன் பின்னர் நானும் என் அம்மாவும் ஒரு அலுவலகத்துக்கு போனோம். அப்போது கார்த்திக் சார் மூலம் துருவங்கள் 16 படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அப்போ கூட நான் அந்த படம் வெளியாகாது என்று தான் நினைத்தேன். அப்புறம் ஷூட்டிங் போன அப்புறம் கூட நான் கார்த்திக் சார்கிட்ட கேட்ட , சார் இந்த படம் சத்யம் தியேட்டர்லயாவது ரீலீஸ் ஆகுமா என்று கேட்டேன்.

ஆனால், அந்த படத்தை என் அம்மாவுடன் பார்த்த போது அவர்கள் கண்ணில் இருந்து வந்த ஒரு துளி கண்ணீர் நான் சாதித்து விட்டேன் என்ற ஒரு நம்பிக்கையை அளித்தது என்று கூறியிருக்கிறார் யாஷிகா.


Share on Google Plus

About Admin

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி