பிரித்தானியாவில் 8 பெண்களை திருமணம் செய்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

பிரித்தானியாவில் 8 பெண்களை விவாகரத்து செய்துவிட்டு 9-வது பெண்ணை திருமணம் செய்வதற்காக காத்துகொண்டிப்பவருக்கு புற்றுநோய் இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

பிரித்தானியாவை சேர்ந்த Ron Sheppard என்ற 70 வயது நபர் கிறிஸ்டல் என்ற பெண்ணை 9-வது மனைவியாக திருமணம் செய்ய உள்ளார்.

இவர் கடந்த 1966-ம் ஆண்டு தனது முதல் மனைவியான மார்கரட் உடன் மூன்று குழந்தைகளைக் பெற்றுக்கொண்டார்.

ஆனால் அவர்கள் இரண்டு வருடங்களுக்குப் பிறகு விவாகரத்து செய்து, 1973 இல் ஜியானெட் என்பவரை மணந்தார்.பின்னர் 1976 ஆம் ஆண்டில் ரான் லெஸ்லியை மணந்தார். ஐந்து ஆண்டுகளாக சேர்ந்து வாழ்ந்த அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் பிறந்தனர். அதன் பிறகு இருவரும் விவாகரத்து செய்து பிரிந்து விட்டனர்.இதனையடுத்து 1982-ம் ஆண்டு கேத்தியை சந்தித்து திருமணம் செய்தார். அதனை தொடர்ந்து Sue என்பவரை திருமணம் செய்து இரண்டு குழந்தைகளுக்கு தந்தையானார்.

ஆனால் 11 வருடங்களாக ரானுடன் சேர்ந்து வாழ்ந்த Sue திடீரென தூக்கி எறிந்தார்.

அதன் பின்னர் 1999-ம் ஆண்டு சிங்கப்பூரை சேர்ந்த உஷா என்ற பெண், அவரை தொடர்ந்து வான் என்பவரை 2003-ல் திருமணம் செய்து ஒரு வருடம் சேர்ந்து வாழ்ந்தார்.

இவர்களது திருமணத்தின் போது தான் தன்னுடைய 9-வது மனைவி கிறிஸ்டலை பார்த்துள்ளார். அப்போது கிறிஸ்டலிற்கு வெறும் 15 வயது தான் நடந்து கொண்டிருந்தது.

பின்னர் தன்னுடைய 8 மனைவியாக Weng என்பவரை திருமணம் செய்துகொண்டு 11 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்து வந்தவர், கடந்த 2015 மார்ச் மாதம் அவரிடம் இருந்தும் விவாகரத்து பெற்றார்.இவ்வாறு அடுத்தடுத்து 8 பெண்களை நிராகரித்து 9-வது பெண்ணான கிறிஸ்டலை திருமணம் செய்யவுள்ள நிலையில், Ron Sheppard தற்போது தோல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

தான் செய்த பாவங்களுக்கு கிடைத்த தண்டனையாகவே புற்றுநோய் வந்திருக்கிறது என ரான் கருதுகிறார். ஆனால் தோல் புற்றுநோயை எளிதில் சரி செய்துவிட முடியும் என தான் நம்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும் 30 வயதாகும் கிறிஸ்டலிற்கு ஏற்கனவே ஒரு குழந்தை உள்ளது குறிப்பிடத்தக்கது.


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி