பிரித்தானியாவில் கல்லூரி மாணவிக்கு நேர்ந்துள்ள கொடுமை!! 8 முறை கருகலைப்பு!!

பிரித்தானியாவில் கல்லூரி மாணவி ஒருவர் கடத்தப்பட்டு கும்பல் ஒன்றால் 12 ஆண்டுகள் பாலியல் சித்திரவதைக்கு உட்படுத்திய கொடூர சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

பிரித்தானியாவில் செவிலியராக பணியாற்ற வேண்டும் என்ற கனவுடன் கல்லூரி படித்து வந்தவர் சாரா.

15 வயதான சாரா தமது குடியிருப்பில் இருந்து சம்பவம் நடந்த அன்று Tesco வணிக வளாகத்தில் பொருட்கள் வாங்க சென்றுள்ளார்.

ஆனால் அதன் பின்னர் அவர் திரும்பவே இல்லை, இந்நிலையில் கும்பல் ஒன்றால் கடத்தப்பட்ட சாரா புறநகர் பகுதியில் அமைந்துள்ள ஒரு குடியிருப்பில் சிறை வைக்கப்பட்டுள்ளார்.

திடீரென்று ஒருநாள் சிவப்பு நிற இஸ்லாமிய உடையை அணிவித்த அந்த கும்பல் திருமணத்திற்கு தயாராக இரு என கூறி சென்றுள்ளது.

கணவன் யார் என்றே தெரியாமல் அதிர்ச்சியில் உறைந்து நின்ற சாராவை வலுக்கட்டாயமாக மணமேடைக்கு அழைத்து சென்று இளைஞர் ஒருவர் இஸ்லாமிய முறைப்படி திருமணம் செய்துள்ளார்.திருமணத்திற்கும் அரை மணி நேரம் முன்னரே இவர் தான் மணமகன் என அந்த குடியிருப்பில் இருந்த பெண்கள் உள்ளிட்டவர்கள் சாராவிடம் தெரிவித்துள்ளனர்.

திருமணம் நடந்த சில நிமிடங்களிலேயே சாராவை ஒரு அறைக்கு அழைத்து சென்ற அந்த நபர் வலுக்கட்டாயமாக பாலியல் உறவு வைத்துக் கொண்டுள்ளார்.

சாராவை கடத்திய அந்த கும்பல் அவருக்கும் வெளிவட்டார தொடர்பு மற்றும் குடும்பத்தினருடனான தொடர்பு அனைத்தையும் மறுத்துள்ளனர்.பாலியல் உறவுக்கு மறுப்பு தெரிவித்தால் கடுமையான சித்திரவதைக்கு உள்ளாக்கியுள்ளனர். மட்டுமின்றி போதை மருந்து கலந்த பானத்தை தினமும் வழங்கியுள்ளனர்.

தொடர்ந்து 12 ஆண்டுகள் நடந்த இந்த கொடூர சம்பவத்தினிடையே சாராவுக்கு 8 முறை கருக்கலைப்பு நடந்துள்ளது.

மேலும் குரான் மற்றும் அரபி மொழியை கற்றுக்கொள்ள நிர்பந்திக்கப்பட்டுள்ளார். உருது மற்றும் பஞ்சாபி மொழியை மட்டுமே பேச வேண்டும் என வர்புறுத்தியுள்ளனர்.மேலும் இஸ்லாமிய உடைகளை மட்டுமே பயன்படுத்த வைத்துள்ளனர். கடந்த ஆண்டு தமது 26 ஆவது வயதில் அந்த கும்பலிடம் இருந்து தப்பிய சாரா தமக்கு நேர்ந்த துயரத்தை கண்ணீருடன் வெளியிட்டுள்ளார்.

சாரா கடத்தப்பட்ட அன்று அவரது பெற்றோர்கள் அவரை தீவிரமாக தேடியுள்ளனர். பொலிசாருக்கு தகவல் அளித்தும் புகாரை ஏற்றுக்கொள்ள மறுத்துள்ளனர்.

சாராவை கடத்திச் சென்ற கும்பலானது பிரித்தானிய பாகிஸ்தானியர்கள். பாலியல் அடிமையாக வைத்துக் கொள்ளும் நோக்கிலே இதுபோன்ற கடத்தல் சம்பவங்கள் திட்டமிட்டு நடப்பதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி