விஹாராதிபதியின் கத்திக் குத்து! மூன்று பேர் படுகாயம்!!

தம்புள்ளையில் விஹாராதிபதியின் கத்திக் குத்து காரணமாக மூன்று பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விகாரைக்கு அருகில் உள்ள காணியை துப்பரவு செய்து குப்பையை விகாரையில் போட்டமையினால் மோதல் ஏற்பட்டது. மோதல் வன்முறையாக மாறியமையினால் கத்திக் குத்து தாக்குல் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த கத்தி குத்து தாக்குதலினால் பொலிஸ் கான்ஸ்டபிள், அவரது மனைவி மற்றும் சகோதரன் காயமடைந்து தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் தன்னை தாக்கியதாக கூறி விகாராதிபதியும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நேற்று காலை தாக்குதல் சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி