யாழில் நாடாளுமன்ற பொது நிதிக்குழு!!

நாடாளுமன்ற பொது நிதிக்குழு நேற்றைய தினம் கண்டியில் கூடிய நிலையில் இன்று யாழ்ப்பாணத்தில் கூடவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாடாளுமன்றத்தில் நிதி விவகாரங்களைக் கையாள்வதற்கு நாடாளுமன்ற பொது நிதிக்குழு, கோப்குழு என இரு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் இவ்வாண்டு சமர்ப்பிக்கப்படவுள்ள 2019ஆம் ஆண்டிற்கான வரவு - செலவுத் திட்டத்தை நாடாளுமன்ற பொது நிதிக்குழு ஆராயவுள்ளது.

இந்த நிலையிலேயே இந்தக் குழு முதன்முறையாக நாடாளுமன்றத்துக்கு வெளியே கூடுகின்றதுடன், மூன்றாவது கூட்டம் மாத்தறையில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி