தேசிய சிறுவர் பாதுகாப்பு குறித்த புதிய கொள்கை அமைச்சரவையிடம்!!

அமைச்சரவை அனுமதியை பெற்றுக்கொள்வதற்காக தேசிய சிறுவர் பாதுகாப்பு தொடர்பான புதிய கொள்கை அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இந்த புதிய கொள்கையின் மூலம் சிறுவர்கள் முகம்கொடுக்கும் பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வுகளை பெற்றுக்கொடுக்க எதிர்ப்பார்ப்பதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.

சிறுவர்கள் தொடர்பில் பின்பற்றப்படுகின்ற காலத்திற்கு பொருத்தமற்ற சட்டங்களை திருத்தவும், நீதிமன்றங்களில் தேக்க நிலையில் உள்ள சிறுவர்கள் தொடர்பான வழக்குகளை துரிதப்படுத்தும் நோக்கிலும் இந்த புதிய கொள்கை கொண்டு வரப்படுவதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி