நாட்டு மக்களிடம் மன்னிப்பு கோரியுள்ள நாமல் ராஜபக்ஷ!

நாட்டு மக்களிடம் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ மன்னிப்பு கோரியுள்ளார்.

கொழும்பில் நேற்று முன்னெடுத்த எதிர்ப்பு பேரணி, எதிர்வரும் காலங்களிலும் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

நாட்டு மக்கள் மாற்றம் ஒன்றை எதிர்பார்த்துள்ளமை நேற்றைய பேரணியின் மூலம் தெளிவாகியுள்ளதாக நாமல் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜனநாயக ரீதியான மக்கள் தலைவரை நியமிக்கும் வரை போராட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என நாமல் குறிப்பிட்டுள்ளார்.

நேற்று இடம்பெற்ற பேரணியின் மக்களுக்கு அசௌகரியங்கள் ஏற்படும் விதத்தில் செயற்பட்டிருந்தால் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக நாமல் கேட்டுள்ளார்.

தனது டுவிட்டர் கணக்கில் பதிவு வெளியிட்டு, இந்த தகவல்களை குறிப்பிட்டுள்ளார்.


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி