கட்டார் நாட்டில் மர்மமான முறையில் உயிரிழந்த இலங்கையர்!!

கட்டார் நாட்டில் தொழில் புரிந்து வந்த புத்தளம், ஆனமடுவ பிரதேசத்தை சேர்ந்த நபரொருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார் என உறவினர்கள் தெரிவித்துள்ளதாக சுட்டிக்காட்டி சிங்கள ஊடகமொன்று இன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த நபரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரின் மனைவி செய்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

41 வயதான இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவர் கடந்த 2016ஆம் ஆண்டு ஜூலை மாதம் கட்டாருக்கு தொழில் வாய்ப்பை பெற்று சென்றுள்ளார். இரண்டு வருட ஒப்பந்தத்தில் அவர் அங்கு சென்றுள்ளார்.

ஒரு லட்சத்து 35 ஆயரம் ரூபாயை கடனாக பெற்று அதனை செலுத்தியே அவர் வெளிநாடு சென்றுள்ள போதும் வேலை வாய்ப்பு முகவர் நிலையம் கூறிய அளவு சம்பளம் அவருக்கு கிடைக்கவில்லை என கூறப்படுகிறது.

இதேவேளை தனது கணவரை கட்டாரில் இருக்கு இலங்கையர்கள் சிலர் தொந்தரவு கொடுத்துள்ளதாக தனக்கு தகவல் கிடைத்தது என உயிரிழந்த நபரின் மனைவி குறிப்பிட்டுள்ளார்.


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி