நிலநடுக்கம் ... சுனாமி எச்சரிக்கை! இலங்கை தொடர்பில்...

இந்தோனேஷியாவில் பெரிய அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.

பல வீடுகளில் அதிர்வு உணரப்பட்டுள்ளது.மலேசியா, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.

இந்தோனேஷியாவில் சுலவேசி என்ற பகுதியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அதிக அளவில் வீடுகள் இருக்கும் பகுதியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இதனால் கட்டடங்கள் பல இடிந்து உள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கிறது. 10 பேர் வரை இதனால் உயிரிழந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

ரிக்டர் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் 7.7 ஆக பதிவாகி இருக்கிறது. இதனால் தற்போது சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

இலங்கை தொடர்பில் எந்த ஒரு அறிக்கையும் சர்வதேச புவியியல் அவதான நிலையமோ இலங்கை புவியல் அவதான நிலையமோ வெளியிட வில்லை என்பது குறிப்பிடத் தக்கது...

எனினும் இந்த நில அதிர்வு காரணமாக, இலங்கைக்கு எதுவும் பாதிப்பு உள்ளதாக என்பது தொடர்பில் இதுவரையில் அறிவிக்கப்படவில்லை.

புவியியல் அமைப்பின்படி நெருப்பு வளையம் என்றழைக்கப்படும் ஜாவா, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் மற்றும் மியான்மர் போன்ற நாடுகளில் அவ்வப்போது பயங்கரமான நிலநடுக்கங்கள் ஏற்படுவது வழக்கமாக உள்ளது.

2004ம் ஆண்டு ஜாவா, இந்தோனேசியா பகுதியில் ஏற்பட்ட பாரிய நில அதிர்வு காரணமாக இலங்கை உட்பட பல நாடுகளில் இலட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.


Share on Google Plus

About Admin

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி