யாழில் அதிகரித்துள்ள ஆபத்து! வெளியாகிய அதிர்ச்சி தகவல் !

யாழ்.மாவட்டத்தில் காரைநகர் பிரதேச செயலக பிரிவிலேயே போதைப்பொருள் பாவனை அதிகரித்துக் காணப்படுவதாக புள்ளிவிவரங்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.அங்கு போதைப் பொருள் கடத்தல்கள் – விற்பனையும் அதிகரித்துள்ளன என்று கூறப்பட்டது.

இதற்கு அங்கு நிரந்தர பொலிஸ் நிலையம் இல்லாமையும் காரணம் எனச் சுட்டிக்காட்டப்பட்டது.

காரைநகரில் தனியான பொலிஸ் நிலையம் ஒன்றை அமைக்க விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு ஊர்காவற்றுறை பிரிவுப் பொறுப்பான உதவிப் பொலிஸ் அத்தியட்சகருக்கு யாழ்.மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அறிவுறுத்தினார்.

யாழ்ப்பாண மாவட்டத்திலேயே காரைநகர் பிரதேசத்தில்தான் போதைப்பொருள் பாவனை அதிகமாக உள்ளது. அங்கு போதைப்பொருள் கடத்தல்கள் – விற்பனையும் தாராளமாக இடம்பெறுகின்றன” என்று யாழ். மாவட்ட சமூகப் பாதுகாப்புக் குழுக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

யாழ்ப்பாண மாவட்ட சமூகப் பாதுகாப்புக் குழுக் கூட்டம் மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தலைமையில் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் நேற்று நடைபெற்றது.யாழ்.மாவட்டத்திலுள்ள சகல பிரதேச செயலக பிரிவுகளையும் சேர்ந்த சிறுவர் பாதுகாப்பு அலுவலர்கள், சிறுவர் நன்நடத்தை அலுவலர்கள், குடும்பநல உத்தியோகத்தர்கள், பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஆகியோர் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர்.

இதன்போது பிரதேச செயலக ரீதியாக போதைப்பொருள் பாவனை தொடர்பில் கூட்டத்தில் பங்கேற்ற தரப்பினரால் எடுத்துரைக்கப்பட்டது.


Share on Google Plus

About Admin

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி