அக்கராயன் பிரதேச வைத்தியசாலையில் பசியில் தவிக்கும் நோயாளர்கள்!

கிளிநொச்சி அக்கராயன் பிரதேச வைத்தியசாலையில் விடுதிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறும் நோயாளர்களுக்கு உணவு வழங்கப்படுவதில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

இதுவரை விடுதிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறும் நோயாளர்களுக்கு உணவு வழங்கப்பட்டு வந்த நிலையில் திடீர் என்று கடந்த சில தினங்களாக உணவு வழங்குவது நிறுத்தப்பட்டு விட்டதாக நோயாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

அக்கராயன் பிரதேசம் கிளிநொச்சி மாவட்டத்தில் வறுமைக்கோட்டிற்கு உட்பட்ட பல கிராமங்களை கொண்ட பிரதேசமாகும்.

இது தொடர்பில் கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் மருத்துவர் குமாரவேல் அவர்களிடம் வினவிய போது,

அக்கராயன் மருத்துவமனை விடுதிகளில் அனுமதிக்கப்படும் நோயாளர்களில் உணவு கோரும் நோயாளர்கள் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு மாற்றப்படுகின்றனர்.

குறித்த வைத்தியசாலையில் இதுவரை காலமும் சிற்றூழியர்களே உணவு சமைத்துவந்தனர். கடந்த சில தினங்களாக அவர்கள் சமைப்பதனை நிறுத்திவிட்டனர். இதனாலேயே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி