உறுதியளித்த விடயத்தை நிறைவேற்றிய மைத்திரி!

யாழ்ப்பாணத்தில், குரும்பசிட்டியில் 12 அரைஏக்கர் காணியும், ஆணைக்கோட்டை கூழாவடி இராணுவ முகாமும், கலைமகள் மகா வித்தியாலயம் அமைந்துள்ள காணிப்பகுதியும் விடுவிக்கப்பட்டுள்ளன.

இந்த நிகழ்வுகள் இன்று காலை 9.30 மணி அளவில் கலைமகள் மகாவித்தியாலய வளாகத்தில் நடைபெற்றுள்ளது.

இந்த நிகழ்வில் யாழ். மாவட்ட கட்டளை தளபதி தர்சன ஹெட்டிஆராச்சி, மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம், தெல்லிப்பழை பிரதேசசெயலாளர் சிவசிறி, வடமாகாண கல்வி பணிப்பாளர் உதயகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதேவேளை, யாழ். மயிலிட்டியில் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள மயிலிட்டி மகா வித்தியாலயம் இன்னும் 2 வாரங்களில் விடுவிக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் உறுதியளித்திருந்தார்.

அதற்கமைய இப்பாடசாலை காணியை, பாதுகாப்பு கட்டளைத் தளபதி இன்று யாழ். மாவட்ட அரச அதிபர் நா.வேதநாயகனிடம் கையளித்துள்ளார்.


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி