சந்திரிக்காவின் மத விரோத செயற்பாடுகள் குறித்து கவலை கொள்ளும் மகிந்த!!

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் மத விரோத செயற்பாடுகள் சம்பந்தமாக தான் மிகவும் கவலையடைவதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

மொனராகலையில் இன்று முற்பகல் நடைபெற்ற சமய வைபவம் ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

அரச பணத்தை பயன்படுத்தி பௌத்த மதத்திற்கோ வேறு எந்த மதங்களுக்கோ எதிராக விமர்சனங்களை செய்ய அரசாங்கத்திற்கு உரிமையில்லை.

அரச பணத்தை செலவிட்டு நல்லிணக்கம் என்ற பெயரில் பௌத்த மதத்திற்கு எதிரான விமர்சனங்களை முன்வைக்கும் நாடகங்களும், திரைப்படங்களும் தயாரிக்கப்படுவதாக மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி