நடிப்பை தாண்டி வேறு தொழிலிலும் களமிறங்கியிருக்கும் டாப்ஸி!

தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து பிரபலமானவர் டாப்ஸி. இதனையடுத்து பாலிவுட்டிலும் நல்ல படங்களில் நடித்து தனக்கென்று தனி இடத்தை பிடித்துள்ளார்.

படத்தில் நடித்துவரும் இவர் அதே நேரத்தில் வேறு தொழிலும் செய்யவுள்ளாராம். தன் தம்பியுடன் இணைந்து ஹோட்டல் தொழிலில் களமிறங்கவுள்ளாராம்.

இவர் ஏற்கனவே தன் தங்கையுடன் இணைந்து திருமண வேலைகளை செய்யும் வெட்டிங் பிளானர் தொழில் செய்து வருகிறார்.

பட வருமானத்தை மட்டும் நம்பியிருக்காமல் பல நடிகைகள் வேறு தொழில் மூலம் வருமானம் ஈட்டிவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Share on Google Plus

About Admin

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி