சமந்தா கணவருக்கு வந்த தர்ம சங்கடம்! இப்படி ஒரு நிலைமையா !

நடிகை சமந்தா கடந்த வருடம் தெலுங்கு சினிமாவின் பிரபல நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பிறகு சில நாட்களிலேயே சினிமாவுக்கு திரும்பிவிட்டார்கள்.

பிரபல நடிகரின் குடும்ப வாரிசான சைதன்யா 2009 ல் ஹீரோவாக அறிமுகமாகி சினிமாவில் இதுவரை 15 படங்களில் நடித்திருக்கிறார். ஆனால் அவருக்கு தற்போது சங்கடம் தான்.

அவரின் நடிப்பில் வெளியான சில படங்கள் வெற்றி பெற்றாலும் இந்த வெற்றி தனக்கானது என்று சொல்லிக்கொள்ள முடியாத நிலையில் இருக்கிறாராம்.

அவருக்கு விண்ணை தாண்டி வருவாயா படத்தின் ரீமேக்கான ஏ மாய சேஸாவே படம் பெரும் வெற்றியை தந்தது. அதே போல பிரேமம் ரீமேக் தெலுங்கில் வெற்றி பெறவில்லை.

இந்நிலையில் கடந்த முறை வெளியான அவரின் இருபடங்களும் சொன்ன தேதியில் வெளிவராததோடு தோல்வியை தழுவியது. இந்நிலையில் அவர் நடித்துள்ள ஷைலஜா ரெட்டி அல்லுடு படத்தை நம்பியுள்ளாராம் சைதன்யா.

இப்படம் கடந்த ஆகஸ்ட் 31 ல் வெளியாக வேண்டியதாக இருந்தது. ஆனாலும் இப்படம் செப்டம்பர் 13 க்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளதாம். இதனால் சைதன்யா மிகுந்த கவலையில் இருக்கிறாராம்.


Share on Google Plus

About Admin

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி