திடீரென மயங்கி விழுந்த தமிழ் மாணவிகள்; பாடசாலை ஒன்றில் நடந்த பரபரப்பு சம்பவம்!

கிளிநொச்சி, கந்தபுரம்- 2 பாடசாலையில் கல்வி கற்கும் மாணவிகள் மூவர் பிஸ்கட் உண்ட பின்னர் மயங்கி விழுந்த நிலையில் அக்கராயன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த பாடசாலையில் இன்று முற்பகல் 10.45 மணி அளவில் மூன்று மாணவிகள் மயக்கமடைந்துள்ளனர்.

மாணவிகள் பாடசாலை வழியில் உள்ள கடையொன்றில் பிஸ்கட் வாங்கியுள்ளதுடன், அதை சாப்பிட்ட சில விநாடிகளில் மயங்கி விழுந்துள்ளனர்.

விரைந்து செயற்பட்ட ஆசிரியர்கள், அவசர நோயாளர் காவு வண்டிக்கு அழைப்பினை மேற்கொண்டு மாணவிகள் மூவரையும் அக்காராயன் மருத்துவமனையில் அனுமதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த பாடசாலை மாணவிகளில் ஒருவர் தரம் ஏழிலும் மற்றைய இருவர் தரம் மூன்றிலும் கல்வி கற்பதாகவும், தற்போது சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


Share on Google Plus

About Admin

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி