சாதாரண தர மற்றும் உயர்தர பரீட்சைகைளை ஒரே நேரத்தில் நடாத்த முடியாது !

கல்விப் பொதுத்தராதர பத்திர சாதாரண தர மற்றும் உயர்தர பரீட்சைகைளை ஒரே நேரத்தில் நடாத்த திட்டமிட்டுள்ளமை பிரச்சினையை ஏற்படுத்தும் என ஆசிரியர் - அதிபர் தொழிற்சங்க ஒன்றியம் தெரிவித்துள்ளது.

அந்த ஒன்றியத்தின் இணைப்பாளர் ஜோசப் ஸ்டாலின் இதனை தெரிவித்துள்ளார்.

கல்விப் பொதுத்தராதர பத்திர சாதாரண தர மற்றும் உயர்தர பரீட்சைகைளை டிசம்பர் மாதம் நடாத்தி அதே மாதத்தில் பெறுபேறுகளை வெளியிட கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் அண்மையில் தெரிவித்திருந்தார்.

எனினும் இதனால் பல பிரச்சினைகள் உருவாகும் என ஆசிரியர் - அதிபர் தொழிற்சங்க ஒன்றியத்தின் இணைப்பாளர் ஜோசப் ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார்.


Share on Google Plus

About Admin

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி