எந்தவொரு பிரதேசத்துக்குமான பிறப்பு சான்றிதழை ஒரே இடத்தில் பெறலாம்!!

இலங்கையில் உள்ள அனைத்து பிரதேசங்களுக்குமான பிறப்பு சான்றிதழ்களை ஒரே பிரதேச செயலகத்தில் பெற்றுக்கொள்ளும் வேலைத்திட்டம் பதிவாளர் நாயகம் திணைக்களத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

இதன் அடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று பிரதேச செயலகத்திலும் இதற்கான சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்று கோறளைப்பற்று பிரதேச செயலாளர் வீ.வாசுதேவன் இன்று தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

“கோறளைப்பற்று பிரதேச செயலகத்தில் இலங்கையில் சகல பிரதேசங்களுக்கமான scan பண்ணப்பட்ட பிறப்பு, இறப்பு, திருமண உத்தேச வயது சான்றிதழ்கள் மற்றும் வெளிநாடுகளில் பிறந்து இலங்கையில் பதிவு செய்யப்பட்டு scan பண்ணப்பட்ட பிறப்பு சான்றிதழ்களையும் கோறளைப்பற்று பிரதேச செயலகத்தில் பெற்று கொள்ள முடியும்” என தெரிவித்துள்ளார்..


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி