தலையில் வெட்டு தழும்புடன் மீட்கப்பட்டுள்ள மண்டையோடு!!

மன்னார் சதொச வளாகத்தில் தொடர்ச்சியாக சந்தேகத்திற்கு இடமான மனித எச்சங்கள் மற்றும் எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டு வருகின்றன.

65ஆவது தடவையாக நேற்று வளாகத்தில் இடம்பெற்ற அகழ்வு பணியின் போது தலையில் வெட்டு தழும்புடன் மண்டையோடு மீட்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

குறித்த வெட்டு தழும்பு பிரேத பரிசோதனையின் போது ஏற்பட்டதா? அல்லது கூறிய ஆயுதங்களால் தாக்கப்பட்ட போது ஏற்பட்டதா? அல்லது வேறு விதமாக ஏற்பட்டதா என்பது தொடர்பான விடயங்கள் இதுவரை தெரிவிக்கப்படவில்லை.

எனினும், ஒவ்வொரு நாள் அகழ்வு பணியின் போதும் புதிதாக மனித எலும்புக்கூடுகள் அடையாளப்படுத்தப்படுவதனால் அப்புறப்படுத்தும் பணிகளை முழுவதுமாக முடிப்பதில் தாமதம் காணப்படுவதாக அகழ்வு பணியில் ஈடுப்படும் குழுவினர் அறிவித்துள்ளனர்.

இதேவேளை, இதுவரை 120 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், 114 மனித எலும்புக்கூடுகள் குறித்த வளாகத்தில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி