இலங்கைக்கு கடன்சுமையை ஏற்படுத்தியது சீனா அல்ல!!

சீனாவின் கடன்கள், இலங்கைக்குப் பிரதான கடன்சுமையை ஏற்படுத்தவில்லை என்று சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஹூ வாசுன்யிங் தெரிவித்துள்ளார்.

பீஜிங்கில் அண்மையில் இடம்பெற்ற நாளாந்த செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

கடந்த ஆண்டு இலங்கையின் மொத்த வெளிநாட்டுக் கடன்களில் 10 வீதம் மாத்திரமே சீனாவிடம் பெறப்பட்ட கடன்களாகும்.

சீனா வழங்கியுள்ள கடன்களில் 61.5 வீதம், அனைத்துலக சந்தை வீதத்தை விடவும் குறைவான வட்டிக்கு வழங்கப்பட்ட முன்னுரிமைக் கடன்களாகும்.

இலங்கை மத்திய வங்கியின் அறிக்கையின் படி, கடந்த ஆண்டில் இலங்கையின் மொத்த வெளிநாட்டுக் கடன் 4,718.6 பில்லியன் ரூபாவாகும்.

இதில், 10 வீதம் மாத்திரமே சீனாவிடம் பெறப்பட்டது. இலங்கையின் கடன் சுமைக்கு பிரதான காரணம், சீனாவிடம் பெறப்பட்ட கடன்களல்ல என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி