கட்டுநாயக்கவில் திடீரென்று இறங்கிய பாரிய விமானம்; இலங்கைக்கு கிடைத்த அதிஷ்டம் என்ன தெரியுமா?

இலங்கையின் கட்டுநாயக்க சர்வதேச வானூர்தித் தளத்தில் இன்று அதிகாலை பாரிய விமானம் ஒன்று திடீரெனத் தரையிறங்கியுள்ளதாக விமான நிலையத்திலிருந்து தகவல் கிடைத்துள்ளது.

இதிஹாட் விமான நிறுவனத்திற்குச் சொந்தமான A 380 எனும் வானூர்தியே இவ்வாறு அவசரமாகத் தரையிறக்கப்பட்டுள்ளது.

குறித்த வானூர்தி அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரிலிருந்து அபுதாபி நோக்கிப் பயணித்து கொண்டிருந்த நிலையில் வானோடிகளால் அவசரமாகத் தரையிறக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் வானூர்தியில் எரிபொருள் நிரப்புவதற்காகவே இந்த தரையிறக்கம் நிகழ்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விமானத்தின் இந்த தரையிறக்கம்மூலம் கட்டு நாயக்க வானூர்தித் நிலையத்திற்கு குறிப்பிடத்தக்க வருமானம் கிடைத்துள்ளதாக சொல்லப்பட்டுள்ளது.

Share on Google Plus

About Admin

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி