பொருளாதார ரீதியில் பின்தள்ளப்பட்ட பிரித்தானியா!!

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலக பிரித்தானிய பாராளுமன்றம் எடுத்த முடிவு தொடர்பாக கடந்த 2016ம் ஆண்டு நடைபெற்ற பொது வாக்கெடுப்பில் விலகும் தீர்மானத்தை ஆதரித்து அதிகம் பேர் வாக்களித்தனர்.

இதையடுத்து ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து இருந்து பிரிந்து விட்ட பிரித்தானியா தனிநாடாகவே பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்திருக்கும் நாடுகளுடன் முன்னர் இருந்தது போல் வர்த்தக உறவுகளை இனி பிரித்தானியா தொடர முடியாது என கருதப்படுகிறது.

எனவே உலகின் தலைசிறந்த பொருளாதார மையமாக விளங்கிய லண்டன் நகரில் இருந்து பல்வேறு நிதி நிறுவனங்கள் வேறு நாட்டின் முக்கிய நகரங்களுக்கு நகரத் தொடங்கியுள்ளன.

அவ்வகையில் முதலீடுகளை ஈர்ப்பதில் உலகின் மிகப்பெரிய பொருளாதார மையமாக இருந்த லண்டன் தற்போது அந்த சிறப்பை நியூயோர்க் நகரிடம் இழந்துள்ளது. இது தொடர்பாக சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வின் முடிவு இன்று வெளியாகியுள்ளது.

பொருளாதார ரீதியாக சிறப்பிடம் பிடித்துள்ள 100 நகரங்களில் முதலாம் இடத்தில் நியூயோர்க் இரண்டாம் இடத்தில் லண்டன் மற்றும் அடுத்தடுத்த இடங்களில் ஹாங்காங், சிங்கப்பூர் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

மிகப்பெரிய நிதி நிறுவனங்களின் அலுவலகங்கள் உள்கட்டமைப்பு அதிகமான பணியாளர்கள் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி