தேவாலயத்தில் நிர்வாணமாக நின்ற நடிகை கைது !

பிரான்ஸ் மற்றும் லக்ஸம்பர்க் நாடுகளைச் சேர்ந்த நடிகை டெபோரா டி ராபர்டிஸ்.  இவர் கடந்த சனிக்கிழமையன்று லூர்து தேவாலயத்திற்கு சென்றுள்ளார். அங்கு பலர் முன்னிலையில் தனது ஆடைகளை களைந்த டெபோரா, அங்கிருந்த குகையின் வாயிலில் நிர்வாணமாக நின்றார். அவரது தலையில் நீல நிற துண்டு ஒன்றை மட்டுமே அணிந்திருந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அருகில் இருந்தவர்கள் நிர்வாணத்தை மறைக்க முற்பட்டனர். மேலும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதனைத் தொடர்ந்து, தேவாலயத்திற்கு விரைந்த போலீசார் உடனடியாக நடிகையை கைது செய்தனர். பின்னர் அவர் நிபந்தனைகளின் பேரில் விடுவிக்கப்பட்டார் டெபோரா ஏற்கனவே லூவர் அருங்காட்சியகத்தில் உள்ள மோனாலிசா ஓவியத்தின் முன்பு நிர்வாணமாக நின்றதால் கைது செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Share on Google Plus

About Admin

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி