பிரித்தானிய இளவரசி டயானாவின் காதலர் பிரான்ஸில் மரணம்!!

பிரித்தானிய இளவரசியான டயானாவின் காதலர்களிலேயே மிகவும் கவர்ச்சியானவர் என்று அழைக்கப்படும் கலைப் பொருட்கள் விற்பனையாளரான Oliver Hoare தனது பிரான்ஸ் வீட்டில் தனது 73ஆவது வயதில் மரணமடைந்தார்.

ஏற்கனவே திருமணமானவரும், டயானாவைவிட 16 வயது மூத்தவரும், இளவரசர் சார்லசின் நெருங்கிய நண்பருமான Oliver Hoareக்கும் டயானாவுக்கும் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் உறவு மலர்ந்ததாகவும், ஆனால் அதை Oliver வெளிப்படையாக ஒப்புக் கொண்டதில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

டயானா தனது காரின் பின் பக்கத்தில் Oliverஐ மறைத்து வைத்து அரண்மனைக்கு கடத்தி வருவார் என்றும், ஒரு முறை அவர் தப்பிச் செல்ல முயலும்போது நள்ளிரவில் அரண்மனை பாதுகவலர்களிடம் அரை நிர்வாணமாக சிக்கியதாகவும் தெரிகிறது.டயானா, தான் எப்போதும் Oliverயின் நினைவாகவே இருப்பதாகவும், இத்தாலியில் அழகான Oliverஉடன் வாழ்வதாக பகல் கனவு காண்பதுண்டு என்றும் தனக்கு நெருக்கமானவர்களிடம் தெரிவித்துள்ளாராம்.

ஆனால் தனது மனைவியை பிரிய மனமற்ற Oliver இந்த உறவிலிருந்து வெளியேற முயன்றதாகவும், இதனால் அவரது வீட்டுக்கு அடிக்கடி போன் செய்து டயானா தொந்தரவு செய்ததாகவும், இதனால் எரிச்சலுற்ற Oliverஇன் மனைவியின் வற்புறுத்தலின் பேரில் அவர் பொலிசாரிடம் புகாரளித்ததாகவும், சுமார் 300 போன் கால்களை பொலிசார் ட்ரேஸ் செய்ததாகவும், பின்பு Oliver கேட்டுக் கொண்டதின் பேரில் இந்த விடயம் தொடர்பான விசாரணையை பொலிசார் முடித்துக் கொண்டதாகவும் தெரிகிறது.

பின்னர் டயானாவும் பேட்டி ஒன்றில் தான் Oliverஐ அவ்வப்போது அழைப்பதுண்டு என்றும் ஆனால் தொந்தரவு செய்யுமளவிற்கு அல்ல என்றும் தெரிவித்தார்.

பிரபல கலைப் பொருட்கள் விற்பனையாளராகத் திகழ்ந்த Oliver தனது 73ஆவது வயதில் தனது பிரான்ஸ் வீட்டில் மரணமடைந்துள்ளார்.

Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி